10 ஜனவரி 2012

உணவு முறை மூலமாகவும் செக்ஸ் உணர்வை அதிகரிக்க செய்யலாம்.

திருச்சியிலிருந்து வெங்கட்ராமன் எழுதியது,

எனக்கு வயது நாற்பது ஆகிறது.எனக்கு திருமணமாகி பதினைந்து வருடங்கள் முடிந்துவிட்டன.எனக்கு இப்போது செக்ஸ் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகின்றன.டாக்டரிடம் செல்லலாம் என்றால் தயக்கமாக உள்ளது.நாம் தினமும் உண்ணும் உணவுப்பொருட்களின் மூலமே செக்ஸ் உணர்வை அதிகரிக்க செய்ய ஏதாவது வழியிருக்கிறதா,அல்லது ஏதாவது மருந்துதான் வாங்கி சாப்ப்டவேண்டுமா?????



பதில்-

நீங்கள் கவலையே படவேண்டாம் வெங்கட்.எந்த மருந்தும் சாப்பிடவும் வேண்டியதில்லை.நீங்கள் கேட்டதுபோலவே உணவினையே மருந்தாக பயன்படுத்தலாம் நல்ல பலன் கிடைக்கும்.

உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.

நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள்.

நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை.

கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக